திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (18:29 IST)

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

நமது முன்னோர்கள் வாழை இலையில் சாப்பிடுவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் நாகரீகம் வளர வளர வாழை இலையை நாம் சுத்தமாக மறந்துவிட்டோம், வாழை இலையில் சாப்பிடுவதால் உணவின் ருசி அதிகரிப்பது மட்டுமின்றி உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் என்பதை இனியாவது புரிந்து கொள்வோமா?
 
வாழை இலையில் உணவை வைத்து சாப்பிடுவதால் தோலுக்குப் பளபளப்பைக் கொடுத்து, செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாள்பட்ட சளி, ருசியின்மை ஆகிய குறைபாடுகள் நீங்கும் என நமது முன்னோர்களின் சித்த மருத்துவம் சொல்கிறது.
 
கெட்டுப் போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால் வாழை இலையின் மேற்புறத்தில் ஒரு புதிய நிற நீர் உற்பத்தியாகி இலையில் ஒட்டாமல் வடிந்துவிடும். இதன்மூலம் உணவின் விஷத்தன்மையை அறிந்து அந்த உணவை தவிர்த்துவிடலாம். எனவேதான் எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம் என நம் முன்னோர்கள் கூறி வந்தார்கள்.
 
அல்சர் நோய் பாதிப்பு அடைந்தவர்கள் தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்ட்டு வந்தால் அவர்களுடைய இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் உள்ள புண்கள் கரைத்து புதிய செல்களைத் தோற்றுவிக்கும் என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது
 
மேலும் வாழை இலையில் சாப்பிட்டால் உடல் எடை கூடாமல் இருக்கும். நார்ச்சத்து, உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் செம்புச் சத்துகள், கண்களைப் பாதுகாத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.