பெண்களுக்கு லேசாக முளைக்கும் மீசை.. பக்க விளைவு இல்லாமல் நீக்குவது எப்படி?
ஒரு சில பெண்களுக்கு ஆண்களைப் போலவே உதட்டுக்கு மேல் லேசான மீசை வளரும் நிலையில் அதை சேவ் செய்தோ அல்லது கிரீம் அப்ளை செய்தோ நீக்குவதற்கு பதிலாக எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் நீக்குவது எப்படி என்பதை பார்ப்போம்.
உதட்டுக்கு மேல் ஒரு சில பெண்களுக்கு மீசை லேசான மீசை வளர்வதால் அழகையே கெடுத்துவிடும். இந்த நிலையில் அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் அரை ஸ்பூன் வசம்பு பொடி எடுத்து தண்ணீரில் குழைத்து கொண்டு அந்த பேஸ்ட்டை உதட்டுக்கு மேல் லேசான முடி இருக்கும் இடத்தை தடவ வேண்டும். பத்து நிமிடம் அப்படியே விட்டு விட்டு அதன் பிறகு தண்ணீரில் முகத்தை கழுவினால் கழுவ வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இதை செய்தால் முடி உதிர்ந்து விடும்.
அதேபோல் பால் மற்றும் மஞ்சள் சேர்த்து பேஸ்ட் ஆக்கி அதை முடி உள்ள இடத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவினால் முடி நிரந்தரமாக வளராது.
Edited by Mahendran