திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 30 அக்டோபர் 2024 (18:50 IST)

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

crackers
தீபாவளி பண்டிகையை  பொதுமக்கள் அனைவரும்  பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். ஒருவேளை விபத்து ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
 
பட்டாசு விபத்துகள் ஏற்படும்போது, கைகளில் மிகவும் காயங்கள் ஏற்படும். அதற்கு பிறகு கண்களில் பட்டாசு துளிகள் விழுந்து காயம் உண்டாக்கும். இத்தகைய துளிகள் கண்ணின் இமைப்பகுதி, விழிப்படலம் மற்றும் கண் நரம்புகளை பாதிக்கக்கூடும். தகுந்த சிகிச்சை பெறாமல் விட்டால், பார்வை இழப்பு, பார்வை திறனில் குறைபாடு, மற்றும் விழித்திரை பாதிப்பு போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். எனவே, கண்களில் தீப்பொறி அல்லது பட்டாசு துண்டுகள் விழுந்தால், அவற்றைப் கண்களை தேய்க்கவும், கசக்கவும் கூடாது.  
 
அதே நேரத்தில், பட்டாசு மூலம் ஏற்பட்ட காயங்களுக்கு தனியாக வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது, ஏனெனில் அது இன்னும் பாதிப்புகளை அதிகரிக்கக் கூடும். தூய நீரில் கண்களை திறந்து ஒரு சில நொடிகள் வைத்திருப்பதும், மென்மையாக கழுவுவதும் அவசியமாகும். பின்னர் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளோ அல்லது களிம்புகளோ தடவக்கூடாது.  
 
 மேலும், பட்டாசுகளை வெடிக்கும்போது, கண்களை முழுமையாக மறைக்கும் வகையிலான கண்ணாடிகளை அணிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியும். 
 
Edited by Mahendran