புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (16:17 IST)

பிரீமியம் திட்டங்கள் ரத்து? TRAI-க்கு எதிராக திரும்பிய Airtel & Vodafone!

பிரீமியம் திட்டங்களை நிறுத்தி வைக்க கோரும் TRAI-க்கு எதிராக வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல். 
 
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஏர்டெல் மற்றும் வோடபோன ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், இந்தியாவில் அதிக தொகை கொடுக்கும் சிலருக்கு மட்டும் அதிவேக இணைய வசதி வழங்கும் பிரத்யேக சலுகைகள் வழங்குவதை நிறுத்துமாறு கூறியுள்ளது. 
 
அதோடு, அதிக விலை கொடுத்தால் அதிக டேட்டா வழங்கும் நீங்கள் மற்ற சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு எந்த விதத்தில் பாதுகாப்பு வழங்குவீர்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளது. 
 
இந்நிலையில் பிரீமியம் திட்டங்களை நிறுத்தி வைக்கும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) அறிவிப்புக்கு எதிராக வோடபோன் ஐடியா தொலைத் தொடர்பு டிடிஎஸ்ஏடி (Telecom Disputes Settlement and Appellate Tribunal TDSAT) நகர்த்தியுள்ளது. 
 
இதேபோல பாரதி ஏர்டெல் நிறுவனமும் சட்டப்படி உதவியைப் விரைவில் வழக்குத் தாக்கல் செய்யலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா திங்களன்று TRAI க்கு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தின. ஆனால் TRAI மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.