புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2018 (19:15 IST)

ஆஸ்தான நடைமுறைக்கு இறங்கிய வோடபோன்!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் புதிய சேவைகளை அறிமுகம் செய்வதை நிறுத்திவிட்டு பழைய சேவைகளில் மாற்றங்களை கொண்டு வருவதை வாடிக்கையாக மற்றியுள்ளன. 
 
ஜியோ, ஏர்டெல், ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் இந்த நடைமுறையை பயன்படுத்திய நிலையில், தர்போது வோடபோன் தனது ரூ.198 திட்டத்தின் மீது மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 
 
இனி வோடாபோனின் ரூ.198 திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படும். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மொத்த டேட்டா நன்மையானது 39.2ஜிபி-க்கு உயர்ந்துள்ளது. 
 
இந்த திருத்தம் மும்பை போன்ற சில வட்டாரங்களில் மட்டுமே தற்போதைக்கு கிடைக்கிறது. விரைவில் அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் சில கட்டுபாடுகளும் உள்ளன. 
 
# வாரத்திற்கு 1000 நிமிடங்களுக்கு மேல் (உள்ளூர் + எஸ்டிடி) பயன்படுத்த முடியாது. அந்த வரம்பை தாண்டினால் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் நொடிக்கு ஒரு பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். 
 
# தினசரி வரம்பில் 250 நிமிடங்களுக்கும் அதிகமாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நொடிக்கு ஒரு பைசா என்ற விகிதத்தின் கட்டணம் வசூலிக்கப்படும். 
 
# ஒரு வாரத்தில் 300-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட எண்களை அழைக்கும் வாடிக்கையாளர்களும் வினாடிக்கு ஒரு பைசா என கட்டணம் வசூலிக்கப்படும்.