திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 மார்ச் 2019 (11:21 IST)

ரூ.13,000 + 6,000: குறைந்தது ஒப்போ ஸ்மார்ட்போனின் விலை!!!

ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது படைப்பான ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து அதிரடி ஆஃபர் வழங்கியுள்ளது. இந்த ஆஃபர் குறித்த விரிவான தகவல் பின்வருமாறு...
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன். அப்போது அதன் விலை ரூ.45,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் மீது விலை தள்ளுபடி மற்றும் எக்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. 
 
ஆம், ரூ.6000 விலை தள்ளுபடி செய்யப்பட்டு இப்போது ரூ.39,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனோடு, ரூ.13,400 வரை எக்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,000 விலை தள்ளுபடியில் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு உள்ளது. 
ஒப்போ ஆர்17 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
# அட்ரினோ 616 GPU, கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
# 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/2.4, OIS
# 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, TOF 3D கேமரா
# 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், 3D போர்டிரெயிட்
# 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி