வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 22 டிசம்பர் 2018 (16:24 IST)

ஜியோனி ஸ்மார்ட்போன் நிறுவனம் திவால்: சூதாட்டமே காரணமா..?

ஜியோனி நிறுவனம் 2002 ஆம் ஆண்டு ஷென்சென், குவாங்டாங்-கில் தொடங்கப்பட்டது. பிறகு இந்தியா, தைவான், வங்கதேசம், நைஜீரியா, வியட்நாம், மியான்மர், நேபாளம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளில் வியாபாரத்தை நீட்டித்தது.
 
ஜியோனி ரூ.20,300 கோடியாக கடனால் திவாலானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோனி திவாலானதற்கு அந்நிறுவனத்தின் தலைவர் லியு லிரோங் சூதாட்டத்தில் ரூ.1000 கோடியை இழந்துதே காரணம் என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் ஜியோமியின் தலைவர் லியு லிரோங். சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்தது உண்மைதான். ஆனால் நிறுவனத்தின் பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தவில்லை. 
 
மேலும் சூதாட்டத்தில் 144 மில்லியன் டாலர்களை மட்டுமே இழந்தேன். ஜியோனி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ. 290 கோடி டாலர்களை 648 சிறு நிறுவனங்களுக்கு நிலுவை தொகையாக வழங்க வேண்டி இருந்தது. 
 
இந்நிறுவனத்திற்கு கடந்த 2013 முதல் 2015-க்குள் மட்டும் சுமார் 1.44 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் இந்த இழப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. இதுவே நிறுவனம் திவாலானதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.