1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (11:53 IST)

100 பில்லியன் டாலரை இழந்து தவிக்கும் ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் விவகரங்களை திருடிய விவகாரத்தால் தற்போது 10 நாட்களில் 100 பில்லியன் டாலர் வரை பங்கு சந்தை மூலதனத்தினை இழந்துள்ளது.

 
ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்களின் விவரங்களை கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா சோதனை செய்ய அவர்களது அனுமதியின்றி பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டது. இதனால் தற்போது சந்தையில் பெரும் சரிவை சந்துள்ளது.
 
கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா முறைகேடு விவராகம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முதலீடுகளை பெற்று வந்தாலும் பங்குகள் விலை குறைவாக உள்ளது. மோஜில்லா, ஆட்டோ உதிரிபாக ரீடெய்லர் பெப் பாய்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்களும் ஃபேஸ்புக் தளத்தில் விளம்பரம் செய்வதனை தற்காலிகமாக நிறுத்திவிட்டது.
 
மேலும், மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.