திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (12:35 IST)

ஜியோவை விட மிகக்குறைந்த விலையில் டேட்டா? ஃபாமுக்கு வந்த பிஎஸ்என்எல்!

பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோவுடன் போட்டிபோடும் வகையில் நிறுததப்பட்ட ரூ.777 ரீசார்ஜ் ப்ளானை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. 
 
ஜியோ ஜிகா ஃபைபர் சேவையை செயல்பாட்டிற்கு வந்ததும் ஏர்டெல் நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களில் சில மாற்றங்களை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை அறிவித்துள்ளது. 
 
ஆம், நிறுத்தப்பட்ட ரூ.777 சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்காக பிஎஸ்என்எல் மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையில் ஒரு ஜிபி டேட்டா மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. 
 
ரூ.777 சலுகை ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்பின் ரூ.849 சலுகையை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ரூ.777 சலுகையில் 500 ஜிபி டேட்டா 50Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ரூ.849 சலுகையில் பயனர்களுக்கு 600 ஜி.பி. டேட்டா 50Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.