திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (16:05 IST)

அன்லிமிட்டெட் ஆஃபர் வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை வழங்கியுள்ளது. ஜியோ வழங்கும் சலுகைகளுக்கு இது போட்டியாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
புதிய சலுகையின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 90 எஸ்எம்எஸ்  வழங்கப்பட்டுள்ளது.இதில், கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. 
 
70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகை நாடு முழுக்க உள்ள அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், சில வட்டாரங்களில் 70 நாட்கள் வேலிடிட்டியும் சில வட்டாரங்களில் 84 நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்படுகிறது. 
 
புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதால், ரூ.399 ழைய சலுகை தொடர்ந்து வழங்கப்படுமா அல்லது நிறுத்தப்பட்டு விடுமா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.