1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
  6. வெற்றிமாறனின் ஹீரோ

Vetrimaran's Next Hero Simbu | வெற்றிமாறனின் ஹீரோ

வெற்றிமாறன்
வெற்றிமாறனின் அடுத்தப் படத்தின் ஹீரோ யார்? இன்டஸ்ட்‌ரியில் ஆளுக்கு ஒரு பதில் சொல்கிறார்கள். என்றாலும் சிம்பு பெயரைதான் பலரும் உச்ச‌ரிக்கிறார்கள்.

ஆடுகளம் தயா‌ரிப்பில் இருக்கும் போதே துரை தயாநிதியின் கிளவுட் நைன் நிறுவனத்துக்காக இரு படங்கள் இயக்கித்தர வெற்றிமாறன் ஒப்புக் கொண்டிருந்தார். இதில் ஒரு படம் கமர்ஷியர். இன்னொன்று மினிமம் பட்ஜெட் படம். கலாபூர்வமானது. இதில் முதலில் கமர்ஷியல் என்பது ஒப்பந்தம்.

வடசென்னை என்ற வெற்றிமாறனின் ஸ்கி‌ரிப்டில் நடிப்பதாக கார்த்தி முதலில் ஒப்புக் கொண்டிருந்தார். ஸ்கி‌ரிப்டில் சில மாறுதல்கள் ஏற்பட்ட போது கார்த்தியின் சோலோ ஹீரோ முக்கியத்துவம் சற்றுக் குறைந்திருந்தது. இதனால் அவர் நடிக்க தயக்கம் காட்டினார். சூர்யா கதை கேட்டு ஆச்ச‌ரியப்பட்டாரே தவிர ஹ‌ரிக்கு கால்ஷீட் கொடுக்கதான் அவசரம் காட்டினார்.

இந்நிலையில்தான் சிம்புவிடம் வெற்றிமாறன் கதை சொல்லி அவரது சம்மதத்தையும் பெற்றார். வெற்றிமாறனின் அடுத்த ஹீரோ சிம்புவே என்று அடித்து கூறுகிறார்கள். நம்புவோம்.