Achuthananthan Felicitate Kamal | இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தியவர் கமல் - கேரள முதல்வர்
கேரள நடிகர் சங்கமான அம்மாவின் புறக்கணிப்பை மீறி மிக கோலாகலமாக நடந்தது கமல்ஹாசனுக்கான பாராட்டு விழா. கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமை தாங்கினார்.
விழாவில் பேசிய அச்சுதானந்தன், இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தியவர் கமல்ஹாசன் என பாராட்டினார். கமலுக்கு பல்வேறு திரைப்பட சங்கங்கள் நினைவுப் பரிசினை வழங்கின.
கமல்ஹாசன் பேசுகையில், தனது இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் மலையாள சினிமா என்றார். மேலும் எல்லா குறைகளுடனும் என்னை நடிகனாக்கியது மலையாள சினிமாவும், மலையாளிகளும்தான் என்றார் அவர்.
கமல்ஹாசன் சார்பில் இன்று திருவனந்தபுரத்தில் கண்தான பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது. இதில் கமல்ஹாசனும் கலந்து கொள்கிறார்.
கமலுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவை கைரளி தொலைக்காட்சி இன்று ஒளிபரப்புகிறது.