1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
  6. ஆயிரத்தில் ஒருவன் ட்ரெய்லர்

Aayirathil Oruvan Trailer | ஆயிரத்தில் ஒருவன் ட்ரெய்லர்

ஆயிரத்தில் ஒருவன் ட்ரெய்லர்
பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவன் வெளியாவது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. படத்தின் இறுதிகட்ட வேலைகளில் அனைவரும் பிஸி. படத்தின் ட்ரெய்லர் வெளியிடும் பணிகளும் நடந்து வருகிறது.

வரும் 13 ஆம் தேதி சென்னை சத்யம் சினிமாஸில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வின் போது படத்தின் சில பாடல்களையும் திரையிட முடிவு செய்துள்ளனர்.

ஆயிரத்தில் ஒருவனுக்கு ‌ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். செல்வராகவன் படத்துக்கு அவர் இசையமைத்திருப்பது இதுவே முதல்முறை. கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன். ஆண்ட்‌ரியா, ‌‌ீமா சென் இருவரும் ஹீரோயின்கள்.

தமிழர்களின் பாரம்ப‌ரித்தை சொல்லும் படமாக தயாராகியிருக்கிறது ஆயிரத்தில் ஒருவன் என்கிறார் தயா‌ரிப்பாளர்.
About Writer
Webdunia