Nanayam expected next month | கேப்பிடல் பிலிம் வொர்க்சின் நாணயம்
கதை கேட்டு மனதுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே இசையமைக்க ஒப்புக் கொள்கிறார் ஜேம்ஸ் வசந்தன். அந்த வகையில் பசங்க படத்துக்குப் பிறகு அவர் இசையமைத்திருக்கும் படம், நாணயம்.
சுப்பிரமணியபுரம், பசங்க போல நாணயம் எமோஷனல் கதை அல்ல. வங்கி திருட்டை பற்றிய படம். திருடனாக நெகடிவ் வேடத்தில் சிபி நடிக்க, ஹீரோவாக நடித்திருக்கிறார் பிரசன்னா.
இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்துடன் காஸ்ட்யூமும் ரசிக்கும்படி இருக்குமாம். அதற்காக தனது காஸ்ட்யூம் டிஸைனர் வாசுகி பாஸ்கருக்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சிபி எந்த தயக்கமும் இல்லாமல் நெகடிவ் வேட்த்தில் நடித்துக் கொடுத்ததாக பாராட்டினார், படத்தின் தயாரிப்பாளரான எஸ்பிபி சரண்.
சக்தி எஸ் ராஜன் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் மிஷ்கினிடம் அசோஸியேட்டாக பணிபுரிந்தவர். ராகினி, யாஸ்மின் இருவரும் ஹீரோயின். அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.