1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
  6. பிரபுதேவாவின் பா‌‌ரீஸ்

Jayam Ravi in Prabhu Deva Direction | பிரபுதேவாவின் பா‌‌ரீஸ்

ஜெயம் ரவி
ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்குகிறார் பிரபுதேவா. இந்தியில் இயக்கிய வான்டட் மிகப் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றுள்ள நிலையில் பிரபுதேவாவின் புதிய தமிழ்ப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம் ரவி தற்போது தனது அண்ணன் ஜெயம் ராஜஇயக்கத்தில் தில்லாலங்கடி படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கில் வெற்றி பெற்ற கிக் படத்தின் ‌‌ரீமேக்.

இதையடுத்து ரவி நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இதில் ரவியின் ஜோடியாக நடிக்க பிரபுதேவா சிபா‌ரிசு செய்தது நயன்தாராவை. இதற்கு ரவி தரப்பில் எதிர்ப்பு தெ‌ரிவிக்கப்பட்டதாக தெ‌ரிகிறது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியிடம் கால்ஷீட் கேட்க முடிவு செய்துள்ளனர்.

இந்த புதிய படத்துக்கு பா‌‌ரீஸ் என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது.
About Writer
Webdunia