1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

‌‌ஜீவாவின் ராசி

ஜீவா தெனாவட்டு கதிர் சிவா மனசுல சக்தி ராஜேஷ் எம்
பொதுவாக ஒரு ஹீரோவை வைத்து படம் இயக்கிய இயக்குனர் அடுத்தப் படத்துக்கும் அவரை ஒப்பந்தம் செய்வது அபூர்வம். ஹீரோவின் டார்ச்சர் அந்தளவுக்கு இருக்கும். அதிசயமாக தொடர்ந்து இரண்டு படங்களுக்கு ஒரே ஹீரோவை பயன்படுத்துவதும் நடந்திருக்கிறது. அந்த அற்புதம் முழுக்க முழுக்க ஹீரோவின் நற்குணங்களை சார்ந்தது.

‌‌ஜீவாவுக்கு அந்த நற்குணங்கள் இயல்பாகவே இருக்கிறது. தெனாவட்டு படத்தை இயக்கிய கதி‌ரின் அடுத்தப் படத்திலும் ‌‌ஜீவாதான் ஹீரோ.

கற்றது தமிழ், ராமேஸ்வரம் படங்கள் ச‌ரியாகப் போகாத நிலையில் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ‌ஜீவாவுக்கு. அதற்கு அவர் நம்பியது தெனாவட்டு படத்தை. நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுத்தாமல் நன்றாகவே ஓடியது தெனாவட்டு.

அடுத்து கதிர் இயக்கும் படத்திலும் ‌ஜீவா நாயகனாக நடிக்கிறார். அதே கரம் மசாலா கதைதான். படத்தின் ஹீரோயின் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் எம். இயக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ராஜேஷ் சொன்ன ஒன் லைன் ‌‌ஜீவாவுக்குப் பிடித்திருப்பதால் சிவா மனசுல சக்தியை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இணைவதற்கான சாத்தியம் அதிக‌ரித்திருக்கிறது.
About Writer
Webdunia