1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

விஜ‌ய் ''வில்லு''‌வி‌ன் ‌வி‌ல்ல‌ன்க‌ள்!

நயன்தாரா ரவிவர்மன் தேவிஸ்ரீ பிரசாத்
விஜயின் புதிய படத்தின் பெயர் வில்லு என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸில் வில்லு, ஜூன் 6 ஆம் தேதியுடன் தனது பயணத்தை தொடங்குகிறதாம்.

விஜயின் ஜோடி நயன்தாரா என்பது ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை தேவிஸ்ரீ பிரசாத் என்பதும் ஏற்கனவே முடிவான விஷயம்.

'வில்லு'வில் இரண்டு வில்லாதி வில்லன்கள் இருக்கிறார்கள். ஒருவர் பிரகாஷ்ராஜ். இன்னொருவர் பிஜுமேனன். ஏற்கனவே தமிழ்ப் படங்களில் பிஜுமேனன் நடித்திருந்தாலும் அரசாங்கம் படத்திற்குப் பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வருகிறதாம். முதல் வாய்ப்பு வில்லு!

போக்கிரியைத் தொடர்ந்து வில்லுவையும் வெற்றிபெற வைப்பார் பிரபுதேவா என்ற நம்பிக்கை விஜய்க்கு. நமக்கும் அதே நம்பிக்கைதான்!
About Writer
Webdunia