1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

வித்யாபாலனை நேரடியாக தொடர்புகொண்ட விஜய்!

வித்யாபாலன் தரணி விஜய் த்ரிஷா
தரணி இயக்கத்தில் விஜய் நடிக்கும் குருவி படத்தில் த்ரிஷா இல்லை என்பது முடிவாகிவிட்டது.

ஆரம்பத்தில் த்ரிஷாவே கதாநாயகி நடிக்கட்டும் என்றார் விஜய். இடையில் பிரச்னை காரணமாக த்ரிஷாவை வேண்டாமென்று சொல்லிவிட்டார். தரணி எவ்வளவோ சொல்லி பார்த்தும் பிடிவாதமாக மறுத்துவிட்டராம்.

இப்போது வித்யாபாலன் கதாநாயகியாக நடிக்கிறார். ஆரம்பகாலத்தில் தன்னை கண்டுகொள்ளதாத தமிழ் படவுலகில் நடிக்கக் கூடாது என்று தசாவதாரம் உட்பட பல படங்களை தவிர்த்தார் வித்யாபாலன்.

ஆனால் விஜயே நேரடியாக வித்யாபாலனை தொடர்பு கொண்டு நடிக்க கேட்டிருக்கிறார். பெரிய ஹீரோவே கேட்கிறாரே என்று ஒப்புக் கொண்டாராம் வித்யாபாலன்.
About Writer
Webdunia