தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்திருக்கும் அமீர்
பருத்திவீரன் படத் தொடர்பான பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை. பட்ஜெட்டுக்கு மேலே படம் எடுத்தார் என்று தயாரிப்பாளர் தரப்பில் அமீர் மீது புகார் சொன்னார்கள்.
படத்தயாரிப்பை பாதிலேயே நிதி இல்லாமல் தயாரிப்பாளர் தரப்பில் விட்டுபோனார்கள். அங்கே இங்கே பணம் புரட்டி மீதி படத்தை நான் எடுத்தேன். அந்த வகையில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எனக்கு 80 லட்சம் வரவேண்டும் என்று அமீர் கூறுகிறார்.
இந்த பணத்தை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வாங்கித் தருவதாக தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்த பத்திரம் எழுதி தந்திருக்கிறது. ஆனால் இதுவரை பணம் வந்து அமீர் கைக்கு வந்து சேரவில்லையாம். இந்தப் பணத்தை பெற்றுத்தருமாறு நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார் அமீர்.
இது தொடர்பாக கே.இ.ஞானவேல், சூர்யா, சிவக்குமார், கார்த்தி, தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கு எதிர்தரப்பில் என்ன செய்யப்போகிறார்கள்?