வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. செ‌ய்‌திக‌ள்
Written By VM
Last Updated : புதன், 9 ஜனவரி 2019 (13:54 IST)

இந்திய ரயில்வேயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு: 14 ,033 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 14 ஆயிரத்து 33 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


 
மொத்த காலியிடங்கள்: 14,033
 
பதவி: இளநிலை பொறியாளர்(JE) - 13,034, 
பதவி: இளநிலை பொறியாளர் (JE-IT) - 49
பதவி: இளநிலை பொறியாளர் (DMS) - 456
பதவி: கெமிக்கல் - மெட்டலர்ஜிகல் அசிஸ்டெண்ட் (CMA) - 494
 
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், பிரிண்டிங் டெக்னாலஜி மற்றும் அதனதன் துறை சார்ந்த துறைகளில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கும், இயற்பியல், வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் கெமிக்கல் - மெட்டலர்ஜிகல் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
 
சம்பளம்: முதற்கட்ட சம்பளம் மாதம் ரூ.35,400 + இதர ஊதியம் வழங்கப்படும்
 
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
 
தேர்வு கட்டணம்: பொதுப்பிரிவினர் கட்டணமாக ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். முதற்கட்ட எழுதிய பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.400 திரும்ப பெற்றுக்கொள்ளலாம் மற்ற விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 திரும்ப பெற்றுக்கொள்ளலாம். முழுமையாக விண்ணப்பம் பூர்த்தி செய்யாத மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் செலுத்திய தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெற முடியாது. 
 
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
விண்ணப்பிக்கும் முறை: www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
முதற்கட்ட கணினி வழித் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.
 
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rrcb.gov.in அல்லது http://www.rrbchennai.gov.in/downloads/cen03-2018-notice-30-12-2018.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2019 .