செல்ஃபி எடுக்க சிறப்பு ஏற்பாடு; இந்திய ரயில்வே அதிரடி

Selfie
Last Updated: ஞாயிறு, 11 மார்ச் 2018 (17:08 IST)
செல்ஃபியால் ஏற்படும் விபத்தை தடுக்க பயணிகள் செல்ஃபி எடுப்பதற்கென தனி இடங்கள் ரயில் நிலையங்களில் அமைக்கப்பட உள்ளன.

 
புனே, மும்பை, நாக்பூர், லக்னோ, வாரணாசி, ஜெய்பூர், டெல்லி மற்றும் மைசூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு நவீன மேம்பட்ட வசதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி மூலம் லிப்ட், எஸ்கலேட்டர், சுற்றுச்சுவர் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் போன்றை முக்கிய அம்சங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. 
 
இதில் செல்ஃபி எடுக்க தனி இடம் அமைப்பது முக்கிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. செல்ஃபி பிரியர்கள் ரயில் முன் அல்லது ரயிலில் பயணிக்கும் போது செல்ஃபி எடுக்க விருப்பப்பட்டு விபத்தில் சிக்கி வருகின்றனர். செல்ஃபியால் இந்தியாவில் விபத்து அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதனால் இதை தடுக்கும் வகையில் இந்திய ரயில்வே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :