பாகிஸ்தான் வெஸ்ட் இண்டிஸ் இன்று மோதல்

pak vs WI
Last Modified வெள்ளி, 31 மே 2019 (14:46 IST)
ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகின்றன. இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தானுடன் வெஸ்ட் இண்டிஸ் அணி மோத உள்ளது.

நேற்று தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்துடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 311 ரன் எடுத்தது. இரண்டாவதாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா 207 ரன்களில் விக்கெட் இழந்து தோற்றது.

நாளை நியூஸிலாந்து அணிக்கு எதிராக இலங்கையும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவும் விளையாடுகின்றன. இன்றைய மேட்ச் பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. தற்போது டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :