1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 அக்டோபர் 2018 (18:59 IST)

தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்: கெத்து காட்டும் இந்திய பவுலர்கள்!

இந்தியா மற்றும் மே.இ.தீ. அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் சேர்த்தது. 
 
மும்பையில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்திய அணி சார்பில் ரோஹித் ஷர்மா மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகியோர் சதமடித்து அசத்தினர். தற்போது 378 என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. 
 
துவக்கம் முதலே சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் குவித்துள்ளது.