வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (18:04 IST)

ரோஹித், ராயுடு அசத்தல் சதம் –இந்தியா 377 ரன்கள் சேர்த்தது

இந்தியா மற்றும் மே.இ.தீ. அணிகளுக்கிடையிலான இன்று நடைபெற்ற  நான்காவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.

மும்பையில் இன்று நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் இந்தியா 377 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி சார்பில் ரோஹித் ஷர்மா மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

டாஸ் வெண்ரு முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ரோஹித் மற்றும் தவான் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்தது. தவான் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பெரும் எதிர்பார்ப்போடு களமிறங்கிய விராட் கோஹ்லி 16 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னால் ரோஹித் ஷர்மாவோடு ஜோடி சேர்ந்த அம்பாத்தி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடிய ரோஹித் மற்றும் ராயுடு இருவரும் சதமடித்தனர். சதத்துக்குப் பின் அதிரடி காட்டிய ரோஹித் 162 ரன்களில் ஆட்டமிழந்தார். அம்பாத்தி ராயுடு 100 ரன்களில் ஆட்டமிழந்து ரன் அவுட் ஆகி தனது விக்கெடை இழந்தார்.  அதன் பின் இறங்கிய தோனி -23, கேதார் ஜாதவ் -16, ஜடேஜா- 7 ரன்கள் சேர்த்தனர்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அந்த அணியின் கேமார் ரோச் அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார்.