மைதானத்தில் நடனம் ஆடிய விராட் கோலி, இஷான் கிஷன்! வைரல் வீடியோ
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20, ஒரு நாள் போட்டில், டெஸ்ட் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறது.
ஏற்கனவே டி-20 தொடர் முடிந்து நிலையில், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்தது.
தற்போது நடந்து வரும் ஒரு நாள் தொடரில், 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த நிலையில், நேற்றைய 2 வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நேற்று போட்டில் நிறைவடைந்த பின், மைதானத்தில் கோலி, இஷான் கிஷன் இருவரும் ஆட்டம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.