வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (17:09 IST)

U19 உலக கோப்பை: ஆஸி. வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 
 
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் லீக் காலிறுதி 1-ல் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43.3 ஓவர்களில் 159 ரன்களில் சுருண்டது. 
 
இதன் மூலம் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.