திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2024 (19:18 IST)

இந்த ஒரு போட்டி ஜெயிச்சா ப்ளே ஆஃப் கன்பார்ம்! – LSGஐ எதிர்கொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ்! டாஸ் அப்டேட்!

RR vs LSG
இன்று மாலை நேர போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆப்க்கு கிட்டத்தட்ட தகுதி பெற்று விடும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் வென்று 14 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. இன்னும் 6 போட்டிகளே உள்ள நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் வென்றால் ப்ளே ஆப்க்கு செல்ல தகுதியான புள்ளிகளை அடைந்துவிடும் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேசமயம் 8 போட்டிகள் விளையாடி 5ல் வென்று 10 புள்ளிகளை வைத்துள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளதால் இன்றைய போட்டியில் வென்று மேலும் மேல் நோக்கி நகர முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனால் ஆரம்பத்திலேயே ரன்களை கண்ட்ரோல் செய்து எளிய டார்கெட்டை ராஜஸ்தான் அடையவும் வாய்ப்புகள் உள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோதிக் கொண்டபோது லக்னோவை ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது. இதனால் இன்றைய போட்டியில் லக்னோ பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயிண்டன் டி காக், கே எல் ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரண், ஆயுஷ் பதோனி, க்ருனால் பாண்ட்யா, மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஷின் கான், யாஷ் தாகுர்,

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ரோமன் பாவல், ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வெந்திர சஹல்

Edit by Prasanth.K