திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (19:09 IST)

AUS- டெஸ்ட் தொடர்: ஷான் மசூத் கேப்டன்சியில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு

pakistan
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் புதிய கேப்டன்  ஷான் மசூத் தலைமையில் 18 பேர் அடங்கிய  பாகிஸ்தான் அணியை  தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை-2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன.

இதில், பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து, அந்த தேர்வுக்குழு, கேப்டன் பாபர் ஆசம் உள்ளிட்டோர் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டி  நேற்றுடன் முடிந்த நிலையில், சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் விளையாட உள்ளதாக தேர்வுக்குழு தலைவர் வஹாப் ரியாஸ் கூறினார்.

அதன்படி, புதிய கேப்டன்  ஷான் மசூத் தலைமையில் 18 பேர் அடங்கிய அணியை அறிவிக்கப்பட்டுள்ளது.