திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (08:55 IST)

வெற்றிக்கு மேல் வெற்றி.. கோலி சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!

Rohit sharma
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மாவும் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வந்தது. முதலில் நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலை வகித்த நிலையில் நேற்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது. அடுத்ததாக களம் இறங்கிய இந்தியஅணி 19.5 பந்துகளில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.


இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிகமான டி20 தொடர்களை வென்ற அணி என இந்திய அணி சாதனை படைத்துள்ளது. மேலும் அதிகமான டி20 வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார் ரோகித் சர்மா.

கோலி தலைமையில் இந்திய அணி 32 போட்டிகளில் வெற்றி பெற்றது. நேற்றைய வெற்றியை தொடர்ந்து ரோகித் சர்மாவின் தலைமையிலான அணியின் வெற்றி 33 ஆக உயர்ந்துள்ளதால் அவர் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 42 வெற்றிகளோடு முன்னாள் கேப்டன் தோனி முதல் இடத்தில் உள்ளார்.