திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (10:51 IST)

CSK vs MI: இன்று ஐபிஎல் கிரிக்கெட்டின் இரண்டு சூப்பர் ஸ்டார் அணிகள் மோதும் போட்டி

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே கவனிக்கப்படும் ஒரு அணியாக இருந்து வருகிறது மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா தலைமையில் இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு தொடர் அவர்களுக்கு மிகவும் மோசமாக அமைந்தது. இந்நிலையில் இந்த சீசனில் கம்பேக் கொடுத்து மீண்டும் கோப்பையை வென்றுவிட அந்த அணி கடினமாக உழைக்கும் என சொல்லப்படுகிறது.

மும்பைக்கு அடுத்த படியாக அதிகமுறை கோப்பை வென்ற அணியாக தோனி தலைமையிலான சி எஸ் கே அணி உள்ளது. நான்கு முறை கோப்பை வென்றுள்ள இந்த சி எஸ் கே, அதிக முறை பைனலுக்கு சென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

சிஎஸ்கே-வை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை தோற்கடித்த அணி என்ற பெருமை மும்பை இந்தியன்ஸுக்கு உண்டு. இதுவரை இரு அணிகளும் 34 முறை நேருக்கு நேராக மோதியுள்ள நிலையில் 20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது. 14 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று இரு அணிகளும் மோதும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியைக் காண ஐபிஎல் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.