ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2023 (07:14 IST)

வழக்கம்போல் முதல் போட்டியில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ்: பெங்களூரு அபார வெற்றி..!

mi vs ban
இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றதில்லை என்ற மோசமான சாதனையை வைத்திருக்கும் நிலையில் இந்த ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டியிலும் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து மும்பை தனது முதல் மோசமான சாதனையை தொடர்ந்து வருகிறது,. 
 
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் முதல் நான்கு விக்கெட் மளமளவென விழுந்துவிட்ட போதிலும் திலக் வர்மா மிக அபாரமாக விளையாடி 84 ரன்கள் அடித்தார். 
 
இதனை அடுத்து 172 என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி விளையாடி நிலையில் விராட் கோலி மற்றும் டூபிளஸ்சிஸ் அபாரமான தொடக்கம் காரணமாக 16.2 ஓவர்கள் இடையே பெங்களூர் அணி 172 வெற்றி பெற்றது. விராட் கோலி 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
 
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 
சென்னையில் நடக்கும் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்!
 
Edited by Siva