வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 11 டிசம்பர் 2024 (15:43 IST)

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட போட்டிகளின் வரிசையில் RCB vs CSK போட்டி!

இந்த ஆண்டு மத்தியில் மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் முக்கியமான போட்டி ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே தனது இறுதி ஓவரில் இருந்தபோது 6 பந்துகளில் 17 ரன்கள் அடித்தால் ப்ளே ஆப் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்று இருந்தது.

அப்போது யஷ் தயால் பந்து வீச முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி இரண்டாவது பந்தில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் எட்டக்கூடிய இலக்கையும் எட்ட முடியாமல் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இந்த போட்டி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் மிகவும் பரபரப்பான போட்டியாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டில் இணையத்தில் அதிகமாகத் தேடப்பட்ட போட்டிகளின் பட்டியலில் இந்த போட்டி ஒன்பதாவது இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி உள்ளது.