செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2022 (09:30 IST)

இந்திய அணிக்காக அதிக ரன்கள்… டிராவிட்டை முந்திய கோலி!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலி நேற்றைய போட்டியில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார்.

நேற்றைய போட்டியில் சிறப்பாக இறுதிவரை ஆடி 48 பந்துகளில் 63 ரன்களை சேர்த்தார். இந்த ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணமாக அமைந்தன. இந்த அற்புதமான இன்னிங்ஸ் மூலமாக கோலி ஒரு முக்கியமான மைலகல்லை எட்டினார்.
இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் தற்போது ராகுல் டிராவிட்டை முந்தியுள்ளார் கோலி. கோலிக்கு முன்பாக தற்போது சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இருக்கிறார்.
  • சச்சின் டெண்டுல்கர் - 34,357 ரன்கள் - 664 போட்டிகள்
  • விராட் கோலி - 24,078 ரன்கள் - 471 போட்டிகள்
  • ராகுல் திராவிட் - 24,064 ரன்கள் - 404 போட்டிகள்
  • கங்குலி - 18,433 ரன்கள் - 421 போட்டிகள்
  • எம்.எஸ்.தோனி - 17,092 ரன்கள் - 535 போட்டிகள்