செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 6 அக்டோபர் 2014 (18:15 IST)

கிரிக்கெட்: தரவரிசைப்பட்டியலில் இந்தியா நம்பர் ஒன் இடத்தில் நீடிக்க பிரகாசமான வாய்ப்பு

சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் நமது இந்திய அணி நம்பர் ஒன் இடத்தில், தனி அணியாக நிலைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
வரும் அக், 8 முதல் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5 ஒரு நாள் போட்டி தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா 5-0 என்ற கணக்கில் தொடரை வென்றால், சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசைப்பட்டியலில் 116 புள்ளிகள் பெற்று நமது இந்திய அணி தனி அணியாக நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும். 
 

வருகிற தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்று, அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நாளை தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சமநிலை வகிக்கும். ஆனால் தொடரை இழந்தால் நம்பர் ஒன் இடம் பறிபோகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்தியாவின் கோலி 3 ஆவது இடத்திலும், கேப்டன் தோனி 6 ஆவது இடத்திலும், ஷிகார் தவான் முறையே 7 ஆவது இடத்தில் உள்ளனர்.