வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 அக்டோபர் 2018 (13:15 IST)

இந்தியா டாஸ் வெற்றி –முதலில்?

இந்தியா வெஸ்ட் இன்டீஸ் அணிகள் இடையே நடக்கும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அனி டாஸ்  வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான  5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டி கடந்த 21 ந்தேதி கவுகாத்தியில் நடைபெற்றது. அந்த போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

அதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ள இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்கவுள்ள நிலையில் இப்போட்டியில் 81 ரன்களை விராட் கோலி சேர்த்தால் 10000 ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் கடந்த வீரர் என்ற பெருமையை சச்சினிடம் இருந்து பெற்றுக்கொள்வார் என்பதால் கோலியின் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.