ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (08:38 IST)

இன்னைக்கு மழை இருக்காது!- இரண்டாவது டி20 தொடக்கம்!

இந்தியா – இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது போட்டி தொடங்க இருக்கிறது.

இந்தியா – இலங்கை இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும், கோலி தலைமையிலான இந்திய அணியும் மோதும் ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

நேற்று முன்தினம் கவுஹாத்தியில் முதல் போட்டி தொடங்க இருந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியது. மழை நின்ற பிறகு மைதானத்தை காய வைக்க பல முயற்சிகள் எடுத்தும் சரி வராததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தியா டாஸ் வென்றும் விளையாட முடியாமல் போனது.

இந்நிலையில் இரண்டாவது போட்டி மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெறுகிறது. இந்தூர் வானிலை படி மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களால் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.