இந்தியா நம்பர் 1: ஒருநாள் போட்டி, டெஸ்ட் தரவரிசையில் சாதனை!

Last Modified திங்கள், 5 பிப்ரவரி 2018 (16:44 IST)
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 என இழந்து 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது.
 
ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக வென்ற இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை துவைத்து துவம்சம் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டையும் தாக்குப்பிடிக்க முடியாமல் முற்றிலுமாக சரணடைந்தது தென்னாப்பிரிக்கா அணி.
 
இந்த வெற்றி மூலம் 6 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது இந்தியா. இந்த வெற்றிகள் மூலம் இந்திய அணி 121 ரேட்டிங்குகள் பெற்று மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 119 ரேட்டிங்குகளுடன் இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.
 
இந்திய அணி முதலிடத்தை தக்க வைக்க வேண்டுமானால் இந்த தொடரை குறைந்தது 4-2 என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும். ஏற்கனவே இந்திய அணி 121 ரேட்டிங்குடன் டெஸ்ட் போட்டியிலும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இருபது ஓவர் போட்டியில் இந்திய இரண்டாவது இடத்தில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :