1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 28 மே 2024 (09:30 IST)

சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்..! ஹாட் வீடியோக்களை யூடியூபில் தேடியதால் பரபரப்பு..!!

Riyan
பாலிவுட் நடிகைகள் அனன்யா பாண்டே மற்றும் சாரா அலி கான் ஆகியோரின் ஹாட் வீடியோக்களை ராஜஸ்தான் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் யூடியூபில் தேடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
ஐபிஎல் 2024 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக், தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்தார். இந்த சீசனில் பராக் 573 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் ரியான் பராக் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ரியான் பராக் யூடியூப்பில் மீண்டும் நேரடி ஸ்ட்ரீம் மூலமாக பேசினார்.

இந்த நேரலை தொடங்கிய சில நிமிடங்களில், பராக் சில பதிப்புரிமை இல்லாத இசையைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் யூடியூப் நேரலையில் வசமாக சிக்கியுள்ளார்.
 
Riyan Parag
யூடியூப் தேடலின்போது ரியான் பராக் தனது திரையை மறைக்க மறந்துவிட்டார்.  அவர் தனது ஹிஸ்டரியில் பாலிவுட் நடிகைகள் அனன்யா பாண்டே மற்றும் சாரா அலி கான் ஆகியோரின் ஹாட் வீடியோக்களை தேடியது தெரியவந்துள்ளது. 

 
இதன் ஸ்கிரீன்ஷாட்டுகள் வெளியான நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் இந்த ஸ்கிரீன் ஷாட்கள்  சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் ரியான் பராக் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.