வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (18:07 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் ஃபன் மொமண்ட்ஸ்.. வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுவேந்திர சாஹலின் பிறந்ததினத்தை முன்னிட்டு பிசிசிஐ, இந்திய அணி வீரர்களுடன் சாஹல் பயணித்த சந்தோஷ தருணங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

வருகிற ஆகஸ்டு 3 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3 வரை நடைபெறவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய வீரரான யுவேந்திர சாஹலை வாழ்த்தி பிசிசிஐ டிவீட் செய்துள்ளது. அதில் சாஹல் இந்திய அணி வீரர்களுடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை உடைய வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.