மாணவர்களை கண்டபடி தாக்கும் தலைமையாசிரியர் ! வைரல் வீடியோ
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சங்கவாக்கா என்ற கிராமத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள விடுதியில் ஏழைக் குழந்தைகள் பலர் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளிக்கு சமீபத்தில் புதிதாக கோடீஸ்வரராவ் என்ற ஒரு தலைமையாசிரியர் வந்துள்ளார்.அவர் அந்த ஏழை மாணவர்களை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து வருகிறார்.
இவர் அம்மாணவர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ தற்போது வைரலனதால், இதுகுறித்து,அங்குள்ள பெற்றோர்க்கும் தெரிந்து அப்பள்ளியை முற்றுகையிட்டனர். இந்நிலையி ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறித்து போராட்டமும் நடத்தி வருகின்றனர்.