உலகக் கோப்பையில் கண்டிப்பாக நான் இருப்பேன்… தினேஷ் கார்த்திக் சொல்வது என்ன?
இந்திய அணியில் பல ஆண்டுகளாக நிரந்தரமாக இடம் கிடைக்காமல் போராடி அவ்வப்போது இடங்களை பெறுபவர் தினேஷ் கார்த்திக். ஆனாலும் அவருக்கான இடம் கிடைத்தாலும் அதை தொடர்ச்சியாக சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் சொதப்பித் தள்ளுவார்.
கடந்த ஆண்டு நடந்த டி 20 போட்டியில் அவருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்ட போதும், ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடாமல் ஏமாற்றினார். அதன் பின்னர் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அவரை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யவேண்டும் என ரசிகர் ஒருவர் டிவிட்டரில் கூறியிருந்தார்.
அவருக்கு பதிலளித்துள்ள தினேஷ் கார்த்திக் “நிச்சயமாக உலகக் கோப்பை தொடரில் நான் இருப்பேன். அதை மட்டும்தான் என்னால் சொல்லமுடியும்.” என ரிட்வீட் செய்துள்ளார். தற்போது கிரிக்கெட் போட்டிகளில் அதிகளவு வர்ணனையாளராக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக் தான் ஒரு வர்ணனையாளராக இருப்பேன் என்பதைதான் சூசகமாக சொல்லியுள்ளார்.