திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2024 (08:04 IST)

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்க பிசிசிஐ அனுமதி அளிக்கப் போகிறது என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் உலகில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அணிகள் நான்குக்கும் மேற்பட்ட வீரர்களை தக்கவைக்க உரிமை அளிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விரைவில் பிசிசிஐ இதுகுறித்து அறிவிக்கவுள்ளதாகவும் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கவுள்ளதாகவும் ஆனால் RTM எனும் விதி இருக்காது எனவும் சொல்லப்படுகிறது. RTM விதிப்படி தங்கள் அணியில் இருந்த ஒரு வீரரை மற்றொரு அணி ஏலத்தில் எடுக்கும் போது அந்த அணி அதே விலைக்கு அந்த வீரரை எடுத்துக் கொள்ள முடிவு செய்தால், அந்த அணிக்குதான் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் விதியாகும்.

5 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதித்தாலும் அதிலும் ஒரு நிபந்தனையை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், ஒவ்வொரு அணியின் 3 இந்திய வீரர்களையும், 2 வெளிநாட்டு வீரர்களையும் தக்க வைக்க வேண்டுமென்றும் கூறவுள்ளதாம். இதன்படி பார்த்தால் நிறைய அணிகள் தங்கல் ஸ்டார் வீரர்களை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.