வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (10:52 IST)

வரலாற்றில் இன்று… இந்திய கிரிக்கெட் ரசிகர்களை யுவ்ராஜ் சிங் மெய்சிலிர்க்க வைத்த நாள் !

இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.

இந்திய 2007 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பைகளை வெல்ல மிக முக்கியக் காரணம் யுவ்ராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அவர் தனது பங்களிப்பிற்காக தொடர் நாயகன் விருதை வென்றார். அதே போல 2007 ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்து மற்றும ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஆடிய ருத்ர தாண்டவ ஆட்டமும் நாம் உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணியாக அமைந்தன.

2007 ஆம் ஆண்டு இதே நாளில்தான் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்டுவர்ட் பிராடின் ஓவரில் யுவ்ராஜ் ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விளாசி சாதனைப் படைத்தார். அந்த போட்டியில் அவர் 12 பந்துகளில் அரைசதம் அடித்தது இன்றுவரை சாதனையாக உள்ளது. டி 20 கிரிக்கெட் வரலாற்றில் என்றும் ஒரு தலைசிறந்த இன்னிங்ஸாக அது அமையும் என்றால் மிகையில்லை. அந்த இன்னிங்ஸை யுவ்ராஜ் சிங் ஆடி 17 ஆண்டுகள் இன்றோடு நிறைவடைகிறது.