செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (08:36 IST)

இங்கிலாந்திடம் தோற்ற வங்கதேசத்திற்கு அபராதம்! – ஐசிசி நடவடிக்கை!

ENG BAN
நேற்றைய உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியுடன் விளையாடிய வங்கதேச அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.



ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் வங்கதேச அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 364 ரன்களை ஈட்டியது.

தொடர்ந்து சேஸிங்கில் இறங்கிய வங்கதேச அணி 48 ஓவர்களுக்கு விக்கெட்டுகளையும் இழந்து 200 இருபத்து ஏழு ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தற்போது ஐசிசி வங்கதேசத்திற்கு அபராதம் விதித்துள்ளது.

நேற்றைய போட்டியில் ஓவர்க்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் வங்கதேச அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.

Edit by Prasanth.K