வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (23:05 IST)

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் புதிய சாதனை

Nathan Lyon
ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா அணி டி-20 தொடரை வென்றுள்ள நிலையில்,  இலங்கை அணி ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் நாதன் தன் அணியின் பந்து வீசால் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டும், 2வது இன்னிங்ஸில்  4 விக்கெட்டும் கைப்பற்றினார்.

இந்த நிலையில்,  டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியர்கள் வரிசையில்  நாதன் லயன் 10 வது இட்த்தைப் பிடித்துள்ளார்.

இதுவரை 108 போட்டிகளில் பங்கேற்ற நாதன் 436 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.