வங்கதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சூப்பர் வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி, வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது.
மஹாராஷ்டிரம் மாநிலம் புனேயில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிகெட் தொடர் லீக் ஆட்டம் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசியது. இதில், வங்கதேசம் சார்பில் ஹிரிட்டோ 74 ரன்னும், ஷாண்டோ 45 ரன்னும், ஹசன் 36 ரன்னும் அடித்தனர்.எனவே 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா அணியில் ஆடம் 2 விக்கெட்டும், சீன் 2 விக்கெட்டும் மார்கஸ் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியினர் களமிறங்கினர். அதில், மிச்செல் மார்ஷ் 177 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 63 ரன்னும், டேவிட் வார்னர் 53 ரன்னும் எடுத்தனர்.
எனவே 44.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மிச்செல் மார்ஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.