இன்று துபாய் வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள்… முதல் போட்டியில் விளையாட முடியுமா?

Last Updated: வியாழன், 17 செப்டம்பர் 2020 (10:53 IST)

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில் இன்று அவர்கள் துபாய் கிளம்ப உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா லாக்டவுனால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. அங்கு வீரர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடர் முழுவதும் ஆளில்லாத காலியான மைதானத்தில் நடக்க உள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் விளையாடுவதற்காக ஆஸி மற்றும் இங்கிலாந்து வீரர்கள் இன்று துபாய் வர உள்ளனர். இதனால் அவர்கள் வந்து 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அதன் பிறகே போட்டிகளில் கலந்துகொள்ள முடியும் என்பதே விதிமுறையாகும். ஆனால் அவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதால் 3 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும் என பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதை அவர் ஏற்கும் பட்சத்தில் பெரும்பாலான வீரர்கள் முதல் போட்டியில் இருந்தே விளையாடலாம் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :