1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 மே 2021 (11:34 IST)

‘THE FAMILY MAN’ சீனன் 2 - ரசிகர்கள் என்ன எதிர்ப்பார்க்கலாம்?

ராஜ் & டிகே-யின் பிரபலமான ‘THE FAMILY MAN’ தொடரின் புதிய சீஸன் ஜூன் 4 ஆம் தேதி அன்று அறிமுகமாகவுள்ளதை அமேசான் பிரைம் வீடியோ ஒரு சுவாரஸ்யமான டிரெய்லர் மூலம் அறிவித்துள்ளது. 

 
தி ஃபேமிலி மேனின் புதிய சீசன் இன்னும் பெரிய வீச்சுடன், அதிக சவால்களோடு மேம்பட்ட எதிரியைக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தியாவிலும் 240 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யக்கிடைக்கும். அமேசான் ஒரிஜினல் சீரிஸின் இப்புதிய சீசன் அற்புதமான இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டி.கே ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
 
பத்ம ஸ்ரீ வெற்றியாளர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஷ்மி மற்றும் சீமா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன் சமந்தா அக்கினேனியின் டிஜிட்டல் அறிமுகத்தையும் கொண்டுள்ளது. , இந்த சீஸனில் ஸ்ரீகாந்த்திவாரி சமந்தாஅக்கினேனி நடிக்கும் ராஜி என்ற புதிய, சக்திவாய்ந்த மற்றும் கொடூரமான எதிரியை எதிர்த்து போராடவுள்ளார்.

இந்த 9 பாகங்கள் கொண்ட திரில்லர், ஒரு நடுத்தரவர்க்க குடும்பமனிதர் மற்றும் உலகத்தரம் வாய்ந்த உளவாளி என்ற இரண்டு பாத்திரங்களுக்கு இடையில் ஸ்ரீகாந்த் தொடர்ந்து போராடுவதையும், தாக்குதலில் இருந்து நாட்டை காப்பாற்ற முயற்சிப்பதையும் காணலாம். 
உற்சாகமான திருப்பங்கள் மற்றும் எதிர்பாராத க்ளைமாக்ஸால் நிரம்பியிருக்கும், பரபரப்பான அதிரடி நாடகத் தொடரின் வரவிருக்கும் சீசன் ஸ்ரீகாந்தின் இரண்டு உலகங்களையும் தெளிவாகக் காட்சிப்படுத்தவுள்ளது.