1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (13:15 IST)

சமந்தா நடித்த ஃபேமிலி மேன் ட்ரைலர் – நாளை வெளியீடு!

சமந்தா நடித்துள்ள இந்தி வெப் சிரிஸான ஃபேமிலி மேன் ட்ரெய்லர் நாளை வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியில் உருவாக்கப்பட்டு அமேசான் ப்ரைமில் 2019ல் வெளியான வெப்சிரிஸ் ஃபேமிலிமேன். ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கியுள்ள தீவிரவாதம் மற்றும் புலனாய்வை மையமாக கொண்ட இந்த வெப் சிரிஸில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதன் இரண்டாம் சீசன் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக இரண்டாம் சீசன் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டது. இரண்டாவது சீசனில் நடிகை சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இரண்டாம் சீசன் பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் நாளை ஃபேமிலி மேன் ட்ரெய்லர் வெளியாவதாக சமந்தா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.