1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (18:37 IST)

படத்தில் இருந்து விலகியதற்காக ரூ. 4 கோடி கொடுத்த நடிகர்

பாலிவுட் நடிகர் ஒருவர், படத்தில் இருந்து விலகியதற்காக 4 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.


 

 
பாலிவுட்டின் இளம் நடிகர்களில் ஒருவர் சுஷந்த் சிங் ராஜ்புத். ‘எம்.எஸ். தோனி’ படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்தாரே… அவர்தான். கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் சுஷந்த் சிங், ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று படங்களில் நடித்து வருகிறார். ‘ரோமியோ அக்பர் வால்டர்’ படமும் அதில் ஒன்று.
 
சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சுஷந்த் சிங் அறிவித்துள்ளார். ஏற்கெனவே கொடுத்த கால்ஷீட்டில் ஏற்பட்ட குளறுபடியால், தன்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவரை படப்பிடிப்பு நடந்ததற்கான செலவுத்தொகையாக தயாரிப்பாளருக்கு 4 கோடி ரூபாய் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.